Posts

"The Story of the Weeping Camel" (2003 Mongolian Language DocuFilm)

மங்கோலியாவின் கோபி பாலைவனத்தில்... ஒரு திரைப்படத்தின் சுவாரஸ்யத்திற்குக் கிஞ்சித்தும் குறையாத, அழகான, அற்புதமான ஒன்றரை மணி நேர ஆவண சினிமா "The Sory of the Weeping Camel". அந்நிலப்பரப்பும் (Sergey Dvortsevoy-ன் "Tulpan"-ஐ நினைவூட்டியது), மனிதர்களும், அவர்களின் வாழ்வியலும், பண்பாடும், நாட்டுப்புற இசையும் பசுமையாய் மனதில் பதிந்து போயின. தவற விடக் கூடாத படம். புதிதாய் அறியும் நிலங்களும், சக மனிதங்களும், கலாச்சாரங்களும், வாழ்முறையும், அக்கற்றலின் இனிப்பும்தான் உலகத் திரைப்படங்களை சலிக்காது தேடித்தேடிப் பார்க்க வைக்கின்றன. அறிதலையும், கற்றலையும், மன ஆழத்தில் ஏதோ ஒன்றுடன் ஒத்திசைந்த உணர்வினையும், இலக்கிய வாசிப்பின் சுவையையும் அளிக்கும் படங்களைப் பார்க்கப் பார்க்க வியப்பும், பிரமிப்பும் கூடிக்கொண்டேதான் செல்கின்றன. "Lunana: A Yak in the Classroom" படத்தின் காணனுபவத்தை முகநூலில் பகிர்ந்து கொண்டபோது, நண்பர் கணபதி சுந்தர், மேலும் இரு பூட்டானியப் படங்களையும், ஒரு Finnish படத்தையும், ஒரு ஜெர்மன் படத்தையும், "The Story of Weeping Camel"-ஐயும் பார்க்கப் பரிந்து

"இவான் இலியிச்சின் மரணம்" - லேவ் தல்ஸ்தோய்

மிருத்யுவிலிருந்து அமிர்தத்திற்கு... மரணம் குறித்தான பயமும், அது சார்ந்த கேள்விகளும்தான் என் தேடலைத் துவக்கிய முக்கியப் புள்ளிகளாய் இருந்தன. யோசித்துப் பார்த்தால், "சுய மரணம்" கூட அல்ல, நாம் மிகுந்த பிணைப்பு கொண்டிருக்கும், அன்பு செலுத்தும்/அன்பைப் பெறும் ஒருவரின் சட்டென்ற "இல்லாமை" ஏற்படுத்தும் வெற்றிடம், தாங்க முடியாத மன அழுத்தத்தையும், அச்சூழலை நேருக்கு நேர் சந்திக்க முடியாத அதிர்வையும், சூன்யத்தையும், "இது என்ன?" என்ற கேள்வியையும், "இனிமேல் என்ன?" என்ற விரக்தியையும், அதுவரை வாழ்வைப் பற்றி, கொண்டிருந்த வரையறைகளையெல்லாம் சிரிப்பாக்கி, பொசுக்கி முற்றிலும் வேறு கோணத்தில், மாற்றுப் பாதையில் பயணப்பட வைக்கிறது. அப்பா இறந்தபோது நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் (அம்மா இன்னும் 30 வயதைக்கூட எட்டவில்லை). அப்போது கிராமத்தில் (மதுரை திருமங்கலம் கள்ளிக்குடி அருகே ஓடைப்பட்டி) வசித்தோம். நள்ளிரவில் அப்பாவின் உடல், மதுரை இராஜாஜி மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குக் கொண்டுவரப்பட்டபோது நானும், தம்பிகளும் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக்கொண்டிருந்தோம். ம

"கோயில் யானை" (நாடகம்) - ஓம்சேரி என்.என். பிள்ளை

கொச்சாம்பள்ளி கேசவன் அட்டகாசம்!. "கோயில் யானை" சிறிய நாடகம்தான். ஆனால் பக்கத்திற்குப் பக்கம், அங்கதமும்/பகடியும்/எள்ளலும் தெறிக்கின்றன. ஸ்ரீலால் சுக்ல-வின் "தர்பாரி ராக"த்திற்குப் பிறகு, படிக்கும் நேரம் முழுவதும் நான் மனம்விட்டு வெடித்துச் சிரித்துக் கொண்டிருந்தது "கோயில் யானை" வாசிப்பின் போதுதான். தவறவிடக்கூடாத நூல். அவசியம் வாசிக்கப் பரிந்துரைக்கிறேன். ஒன்பது முழுநீள நாடகங்களும், 80 ஓரங்க நாடகங்களும், சில நாவல்களும் எழுதியிருக்கும் ஓம்சேரி என்.என். பிள்ளை, இருமுறை "கேரள சாகித்ய அகாடமி" விருதும், கேரள மாநில அரசின் உயரிய கௌரமான "கேரள பிரபா விருது"ம் பெற்றிருக்கிறார். ஓம்சேரி, கேரளாவின் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் பிறந்தவர். "கோயில் யானை"க்கு, திருவனந்தபுரம் பி.கே. வேணுக்குட்டன் நாயர் நல்ல முன்னுரை ஒன்றைத் தந்திருக்கிறார். இளம்பாரதியின் தமிழாக்கம் மிகச்சிறப்பு. *** மலைக்காட்டில் சுதந்திரமாக மகிழ்ச்சியாகத் திரிந்து கொண்டிருந்த யானைக்குட்டி ஒன்று, தந்திரமாக, குழி வெட்டி பொறி வைத்து பிடிக்கப்பட்டு, நாட்டிற்குள் கொண்டு வரப

"பிறப்பு" (நாவல்) - யு.ஆர். அனந்தமூர்த்தி

சதுப்பு நிலம் கன்னடத்தில் முதன்முதலாக வெளிவந்த போது, "பிறப்பு" குறுநாவல், அக்காலகட்டச் சமூகத்தில் எத்தகைய அதிர்வுகளையும், சலசலப்புகளையும், விவாதங்களையும் உருவாக்கியிருக்கும் என்று இப்போது வாசித்தபின் புரிந்துகொள்ள முடிகிறது.    இந்தியாவின் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரும், ஞானபீட விருது மற்றும் பத்மபூஷண் கௌரவம்  பெற்றவருமான யு.ஆர். அனந்தமூர்த்தி (உடுப்பி ராஜகோபாலாச்சார்யா அனந்தமூர்த்தி), கர்நாடகாவில் ஷிமோகா மாவட்டம் தீர்த்தஹள்ளி அருகே மேளிகே கிராமத்தில் பிறந்தவர். மைசூர் பல்கலையில் பேராசியராகவும், கோழிக்கோடு காந்தி பல்கலையில் துணை வேந்தராகவும் பணிபுரிந்த அனந்தமூர்த்தி, நேஷனல் புக் டிரஸ்ட் மற்றும் சாகித்ய அகாடமியின் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார். அனந்தமூர்த்தியின் மருமகன் விவேக் ஷன்பேக்கும் கன்னட இலக்கிய உலகில் பிரபலமான எழுத்தாளர். "பிறப்பு" நாவல், பழங்கால கேரள நாயர்/நம்பூதிரி தரவாடுகளில் நாம் உணரும், தொன்மையின் ஒருவித பூடக/மந்திரத் தன்மையைக் கொண்டிருப்பதாக எனக்குப் பட்டது. திருமணத்திற்கு அப்பாற்பட்ட தொடர்புகளை நாவலின் சில பாத்திரங்கள் வைத்துக் கொண்டிருக்க

"Parinayam" (1994 Malayalam film)

உண்ணிமாயாவின் ஸ்மார்த்தவிசாரம் எம்.டி. வாசுதேவன் நாயர் எழுதி, பாம்பே ரவியின் பாடல்களுடன், ஜான்சன் மாஸ்டரின் பின்னணி இசையமைப்பில், ஹரிஹரன் இயக்கத்தில் 1994-ல் வெளிவந்த படம் "பரிணயம்". நான்கு தேசிய திரை விருதுகளும் (சிறந்த படம், சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த திரைக்கதை), ஐந்து கேரள மாநில திரை விருதுகளும், இரண்டு ஃபிலிம்ஃபேர் விருதுகளும் பெற்றிருக்கிறது. வழக்கம் போல் ராகங்களின் அடிப்படையில் அமைந்த பாம்பே ரவியின் பாடல்கள் அனைத்தும் மிக இனிமை (ஜேசுதாஸும், சித்ராவும் பாடியிருக்கிறார்கள்). *** படித்த இளம்பெண்ணான "கிழக்கேடத்து" உண்ணிமாயா, தன் குடும்ப பொருளாதார சூழல் காரணமாக, 60 வயதைக் கடந்த செல்வந்தரான "பாலக்குந்நத்து" நம்பூதிரிக்கு நான்காம் மனைவியாக திருமணம் செய்துவைக்கப்பட்டு அந்த வீட்டிற்கு வருகிறாள். பழமையான சமூகச் சடங்குகளில் ஊறிய அவ்வீட்டின் ஆசாரங்களுடனும், நடைமுறைகளுடனும் ஒன்ற முடியாமல் சிரமப்படுகிறாள். நம்பூதிரியின் மற்றொரு மனைவியின் மகனான இளைஞன் குஞ்ஞுண்ணி முற்போக்கு சிந்தனைகள் கொண்டவன். நம்பூதிரி சமூகத்தில் நடைமுறையில் இருக்கும் பழங்கால மூடச் சட

"Tulpan" (2008 Kazhak Film)

டூலிப் மலர் தெற்கு கஜகஸ்தானின் உட்கோடி கிராமப்புறப் பகுதி. பரந்த ஸ்தெப்பி பாலை நிலம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை காய்ந்த புல்வெளிதான்; மரம், செடி கொடிகளோ, பசுமையோ கிஞ்சித்தும் இல்லாத, தூசும் புழுதியும் நிறைந்த, எப்போதும் காற்று வீசிக்கொண்டிருக்கும், அடிக்கடி சுழற்காற்றினால் மணல் வாரி வீசப்படும் வறண்ட பூமி. தண்ணீரும், காய்கறியும் அவ்வப்போது நகரிலிலிருந்து வரும் டிராக்டர் வண்டியிலிருந்துதான் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். ருஷ்யாவின் "ஷகலின்" தீவில், கடற்படையில் பயிற்சி நாட்களை முடித்துவிட்டு, கஜகஸ்தான் கிராமப்புறத்தில் வாழும் தன் அக்கா "சமல்"-ன் வீட்டிற்கு வசிப்பதற்கு வருகிறான் "அசா". சமலின் கணவர் "ஒண்டாஸ்", முதலாளி ஒருவரின் செம்மறி ஆடுகள், சில ஒட்டகங்கள், கழுதைகள், மாடுகள் கொண்ட ஒரு மந்தையின் மேய்ப்பாளர். வேலைக்காக குதிரை வைத்திருக்கிறார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள். மூத்தவன் பெகே (ரேடியோ கேட்பதில் ஆர்வம் கொண்டவன்; பேட்டரி ரேடியோவில் செய்திகள் கேட்டு அப்பாவிற்கு சொல்வான்; நல்ல ஞாபக சக்தி உடையவன்); இரண்டாவது மஹா - பாடுவதில் விருப்பமுள்ளவள்; மூன்றா

"The Banshees of Inisherin" (2022 Irish film)

இருவர் படத்திற்குள் நுழைவதற்கு முன், அயர்லாந்தின் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியும், அதன் உள்நாட்டுப் போரைப் பற்றியும் கொஞ்சமாய் நாம் அறிந்து கொள்ளலாம்; படத்தைப் புரிந்துகொள்வதற்கு மேலும் அது உதவக்கூடும். அயர்லாந்தின் சுதந்திரப் போராட்டத்தில், பிரிட்டிஷ் படைகளுக்கும், உள்நாட்டு ஐ.ஆர்.ஏ துருப்புகளுக்கும் இடையில், 1919-ல் துவங்கிய  கொரில்லா போர்,  1921-ல் "ஆங்கில-ஐரிஷ்" ஒப்பந்தம் உருவான போது முடிவுக்கு வந்தது. ஒப்பந்தத்தின் சாரம், "அயர்லாந்து ஒரு தற்காலிக சுதந்திர அரசை அமைத்துக் கொள்ளலாம்; ஆனால் அது இன்னும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கீழ்தான் செயல்பட்டு வரும்" என்பது. ஐ.ஆர்.ஏ ("Irish Republican Army") அந்த ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்தது. தங்களுக்கு முழு குடியரசு சுதந்திரம் வேண்டுமென்பது அவர்கள் கோரிக்கை. அந்த ஒப்பந்தம் ஐரிஷ் சமூகத்தையே இரண்டாகப் பிரித்தது. பாதிப்பேர் ஒப்பந்தத்தை ஆதரித்தார்கள்; பாதிப்பேர் எதிர்த்தார்கள். தற்காலிக சுதந்திர அரசு அமைக்கப்பட்டதும், 1922-ல் உள்நாட்டுப் போர் வெடித்தது. இப்போது சண்டை உள்ளுக்குள்; ஒப்பந்தத்தின்படி உருவான அரசுக்கும்